திகில் படம் ‘தேடி பிடி அடி’

3d thedi pidi adi_00012இந்திஷ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க ஏகன் இயக்கும் படம் ‘தேடி பிடி அடி’.

புதுமுகங்கள் மகி, கெவின், அர்ஜுன், யாஷிகா, சங்கவி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கார்த்திக் ஹர்ஷா, சரண் பிரகாஷ் இசையமைக்கிறார்கள்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்,

“காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. கலாச்ரமும் மாறிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே குற்றமாகக் கருதப்பட்டது. அதற்குப் பிறகு பேசிக் கொள்ளலாம், பிறகு காதலிக்கலாம் என கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது டேட்டிங் வரைக்கும் வளர்ந்திருக்கிறது.

இந்த டேட்டிங் கலாச்சாரம் நம்ம நாட்டுக்கு ஒத்து வராது. இதைத்தான் தில் பதிவு செய்திருக்கிறோம்.

மகி, கெவின், அர்ஜுன், யாஷிகா, சங்கவி இந்த ஐந்து பேரும் டேட்டிங்குக்காக அடர்ந்த காட்டுப் பகுதிக்கு செல்கிறார்கள். அந்த அடர்ந்த காட்டுக்குள் அவர்கள் சந்திக்கும் திகில் சம்பவங்கள்தான் 3D தேடி பிடி அடி.

தேடி பிடி அடி என்கிற மூன்று வார்த்தைகளில் வரும் 3டி என்பதை குறிக்கவே 3டி என்று வைத்திருக்கிறோம். நான் மணிரத்னத்தின் படங்களைப் பார்த்து அவரை மானசீக குருவாக ஏற்று சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று இயக்குனராகி இருக்கிறேன். அதனால்தான் மோகன் என்கிற பெயரை ஏகன் என்று மாற்றிக் கொண்டேன்,” என்றார் இயக்குனர் ஏகன்.

திகில் படமாக உருவாகி வருகிறது “ 3D  தேடி பிடி அடி.

Read Previous

கமலுடன் நடிப்பாரா காஜல் அகர்வால் ?

Read Next

த்ரில்லர் படம் ‘அஞ்சல் துறை’