கமலுடன் நடிப்பாரா காஜல் அகர்வால் ?

kajal-agarwalஒரு படம் பற்றிய செய்தியோ, அறிவிப்போ வந்தவுடனே பின்னாடியே வால் முளைத்து பல செய்திகள் வெளிவரும்.

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால், இது சம்பந்தமாக காஜலிடம் யாராவது பேசினார்களா இல்லையா என்ற தகவல் கூட இல்லை.

காஜல் அகர்வால், தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருக்கிறார். ஹிந்தியிலும் 2 வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.

காஜலுக்கு, தமிழ் , தெலுங்கில் போட்டியாளராக இருப்பவர் கமல்ஹாசன் மகளான ஸ்ருதிஹாசன். அப்படியிருக்க, அவர் கமலுக்கு ஜோடியாக நடிக்க சம்மதிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கமலுடன் நடிக்க யாருக்குத்தான் கசக்கும்….இருந்தாலும்…போட்டி என்று வரும் போது காஜல் என்ன பண்ணுவார் என்பதுதான் இப்போது கேள்வியாக உள்ளது.

Read Previous

இருவர் மட்டுமே நடிக்கும் ‘வித்தையடி நானுக்கு’

Read Next

திகில் படம் ‘தேடி பிடி அடி’