த்ரில்லர் படம் ‘அஞ்சல் துறை’

anjal thurai_00015தா சினி கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக P. சின்னுச்சாமி தயாரிக்கும் படம் ‘அஞ்சல் துறை’.

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல்கள், எடிட்டிங், இயக்கம் பொறுப்பேற்றிருப்பவர்  A.R. ரபி. இசை – இதேஷ்.

இந்த படத்தில், மோகன் .C, நாராயணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக சௌபர்ணிகா, வனிஷ்கா நடிக்கிறார்கள். மற்றும் தமிழ் செல்வன், ஆசிஷ் மெஹ்ரா, செந்தில், வடிவுக்கரசி, போண்டாமணி, நெல்லை சிவா, பாண்டு, பெஞ்சமின், ஆர்யன், நாகு ஆகியோர் நடிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குனர் A.R. ரபி கூறியதாவது,

“இது ஒரு த்ரில்லர் படம். இந்த படத்திற்காக சமீபத்தில் மூன்று பாடல்கள் படமாக்கப்பட்டது.

“நரி பல்லு சிங்க பல்லு

கொண்டு வந்தோம், வாங்கிக்கோங்க…”

என்ற பாடல் காட்சியில் நாகு, பெஞ்சமின் பங்கேற்றனர்.

“கொக்கரக்கோ குமாங்கோ

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுடா

ரெண்டும் ரெண்டும் நாலுடா”

என்ற பாடல் காட்சியில் மோகன் .C, நாராயணன், செந்தில், போண்டாமணி ஆகியோர் பங்கேற்றனர்.

“இரவு நேரம் உறவு தேடும்

இளமை தானே காதலா

எந்தன் காதலா”

என்ற பாடல் காட்சியில் மோகன் .C, சௌபர்ணிகா பங்கேற்றனர்.

படப்பிடிப்பு நாமக்கல், திருச்செங்கோடு, கேரளா , மற்றும் திருவனந்தபுரம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் A.R. ரபி.

Read Previous

திகில் படம் ‘தேடி பிடி அடி’

Read Next

‘சிவப்பு’ கலர் மட்டுமல்ல….

Most Popular