தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மழை…

kanyakumariமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த 1–ந்தேதி தொடங்கியதையொட்டி தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.

இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறியதாவது, அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்,” என்றும் அவர் கூறினார்.

Read Previous

தமிழில் வெளியாகும் ‘சூப்பர் மேன் 3டி’

Read Next

The Lost Paradise – Short Film

Most Popular