தமிழில் வெளியாகும் ‘சூப்பர் மேன் 3டி’

man of steel_00016இராம. நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் நிறுவனம், இம்மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் 30,000 திரையரங்குகளில் வெளியாகும் ‘மேன் ஆப் ஸ்டீல் ’ – ‘சூப்பர் மேன் 3டி’ படத்தை, தமிழ்நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் 180 தியேட்டர்களில் வெளியிடுகிறது.

தீய சக்திகளிடமிருந்து உலகத்தைக் காப்பாற்ற  வேறு கிரகத்திலிருந்து வருகிறான் கதாநாயகன். இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹென்றி கேவில் திரில்லான காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் உயிரைப் பணயம் வைத்து நடித்துள்ளார்.

கதாநாயகியாக ஏமி ஆடம்ஸ் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ரசல்க்ரோவ், டையன்லேக் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜாக்ஸ்னைடர் பிரமாதமாக இயக்கியுள்ளார். அமீர் மொக்ரி கேமராவையும், ஹேன்ட்ஸ்ஜிம்மர் இசையயையும் கவனித்துள்ளனர்.

சுமார் 1276 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

ஹாரி பார்ட்டர், 2012, ஜார்னி -2 , கோஸ்ட் ரைடர் ஆகிய ஆங்கில வெற்றிப் படங்களை தமிழ்நாட்டில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் நிச்சயம் இந்த படமும் இடம் பெறும்.

இந்த  படத்தின் டிரைலரை தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை விருப்பமுடன் பார்க்கும் வண்ணம் மாயாஜால காட்சிகளும், விஞ்ஞானத்தின் விஸ்வரூப காட்சிகளும் படத்தில் ஹை லைட்டாக அமைந்துள்ளன.

முப்பரிமாண 3டி காட்சிகளில் பார்க்கும் வண்ணம் திரையரங்குகள் தயாராகி வருகின்றன.

Read Previous

அமலா பால் சம்பளம் ஒரு கோடி ?

Read Next

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மழை…

Most Popular