நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ், கடைசியாக 2010ம் ஆண்டு வெளிவந்த ‘நாணயம்’ படத்தில் வில்லனாக நடித்தார்.
அதன் பின் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
தற்போது சொந்தத் தயாரிப்பில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிறார்.
இந்த படத்தை ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்திராஜன் இயக்குகிறார். தரண்குமார் இசையமைக்கிறார்.
படத்தில் ஹீரோவாக நடிப்பது ஒரு நாய். இதற்காக ஒரு நாயை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி சிபிராஜ் கூறுகையில், “வித்தியாசமான கதையுள்ள படங்கள் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான் சினிமாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கியிருந்தேன். இந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ஒரு நாயை மையப்படுத்திய கதை என்பதால், உடனே சம்மதித்தேன். நாய்தான் இந்த படத்தில் ஹீரோ, நான் செகன்ட் ஹீரோதான், ” என்கிறார் சிபிராஜ்.