அழித்தவர்களுக்கு நன்றி – இது இராஜகுமாரன் ஸ்டைல்

thirumathi-tamil-paper-ad

மிகப் பெரிய நட்சத்திரங்களின் படமே மூன்று வாரங்கள் ஓட தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் இயக்கி, ஹீரோவாக நடித்த முதல் படத்தை 105வது நாளாக ஓட வைத்திருக்கிறார் இயக்குனரும், நடிகருமான இராஜகுமாரன்.

பட வெளியீட்டிற்கு பல நாட்களுக்கு முன்பே பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வந்தவர் 100 நாளைக் கடந்த பின்னும் ரெகுலராக விளம்பரம் கொடுத்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல மினிமம் பட்ஜெட் படங்களே ஒரு நாள் விட்டு ஒரு நாள் விளம்பரம் கொடுத்து வரும் நிலையில் படத்தின் பப்ளிசிட்டிக்காக இவ்வளவு செலவு செய்யும் இராஜகுமாரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

105வது நாளான இன்று அவர் பத்திரிகையில் கொடுத்த ஒரு விளம்பரத்தை பார்த்த நமக்கு அதிர்ச்சி. இதுவரை தமிழ்த் திரையுலகம், தெலுங்கு திரையுலகம், ஹிந்தித் திரையுலகம், ஏன் ஹாலிவுட்டிலும் கூட யாரும் செய்யாத ஒன்று.

அதாவது, “105வது நாளில்…நன்றியும்…வணக்கமும்…ஆதரவு அளித்த…அழித்த…பாராட்டிய…பாராமல் திட்டிய…யாவருக்கும் பாரபட்சமில்லாமல்…” என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்.

உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் என ரசிகர்கள் சொல்வது நமக்கு கேட்கிறது, அது போல் அவருக்கும் கேட்கும் என நம்புகிறோம்.

Read Previous

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அனிருத்…

Read Next

உதயநிதி ஜோடியாக காஜல் அகர்வால்…

Most Popular