உதயநிதி ஸ்டாலின் அடுத்து ஹீரோவாக நடிக்க இருக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் வெற்றிகரமான ஹீரோவாக அறிமுகமானார்.
இப்போது எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.
முதல் படத்தில் ஹன்சிகா, இரண்டாவது படத்தில் நயன்தாரா, மூன்றாவது படத்தில் காஜல் அகர்வால் என முன்னணி ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்க அசத்தி வருகிறார் உதயநிதி.
ஒவ்வொரு படத்தையும் மிகவும் திட்டமிட்டு, சரியான விதத்தில் அவர் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்தில் பரிச்சயமான இயக்குனர், இரண்டாவது படத்தில் இரண்டாவது படத்தை இயக்கும் இயக்குனர், மூன்றாவது படத்தில் புதிய இயக்குனர் என அதிலும் வித்தியாசப்படுகிறார்.
‘நண்பேன்டா’ படத்தை அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நண்பனாக நடிப்பது…வேறு யார் ? சந்தானம்தான்…
அடுத்த வருடம் ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
‘நண்பேன்டா’வில் ஹாட்ரிக் அடித்து விடுவார் உதயநிதி….