மூன்று படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். அதில் முதலாவதாக வெளிவந்த ‘3’ மூன்று நாட்கள் கூட ஓடவில்லை. இரண்டாவதாக வந்த ‘எதிர் நீச்சல்’ , எதிர் நீச்சல் போட்டு ஓரளவிற்கு ஓடியது.
மூன்றாவது படமான ‘வணக்கம் சென்னை’ இனிமேல்தான் வெளிவர வேண்டும்.
இப்படி மூன்று படம் இசையமப்பதற்குள்ளாகவே தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருக்கிறார் அனிருத்.
இனி, இசையமைக்கப் போகும் படங்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வாங்கப் போகிறார் என கோடம்பாக்கத்திலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் படத்திற்கு வேறு இசையமைக்கப் போகிறார் என்பதால் இந்த திடீர் உயர்வு இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
அனிருத்தை சமூக வலைத்தளங்களில் ஓவராகவும், வாயார பாராட்டுவதற்கென்றும் சில குறிப்பிட்ட நபர்கள் அளவுக்கதிகமாகவே வேலை செய்கிறார்களாம்.
நீங்க என்ன பண்ணாலும் எல்லோருமே ஒரே கேள்விதான் கேப்பாங்க அனிருத், அது…“ஒய் திஸ் கொல வெறி ?”.