படமே வரலை…அதற்குள் இணையத்தில்…

Atharintiki-Dharedhiவன் கல்யாண், சமந்தா நடித்து  ரிலீசுக்குத் தயாராக உள்ள தெலுங்குத் திரைப்படம் ‘அதரின்திக்கி தரேதி’.

தெலுங்கான போராட்டம் காரணமாக இப்படம் அக்டோபர் மாதம்தான் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால், திடீரென இப்படத்தின் 90 நிமிட படக் காட்சிகள் நல்ல தரமான விதத்தில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு விட்டன.

இதை சிறிதும் எதிர்பாராத படக்குழுவினர் படத்தை இம்மாதம் 27ம் தேதியன்றே வெளியிட முடிவு செய்துவிட்டார்கள்.

மொத்த தெலுங்குத் திரையுலகமும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளது. இனி, படத்தின் எடிட்டிங் சம்பந்தமான வேலைகளை அதிகமாக கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.

திருட்டுத்தனமாக வெளியிட்டவர்களைப் பிடிக்க சட்ட ரீதியாகவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read Previous

பணமும்தான் முக்கியம் – சமந்தா

Read Next

செல்வராகவன் – ஹாரிஸ் பிரிந்தனர் ?

Most Popular