தலைப்பைப் பார்த்துட்டு பதறாம படிங்க…
இது நம்ம ஊரு பவர் ஸ்டார் பத்தின நியூஸ் இல்லை…உண்மையான பவர் ஸ்டார், அதாவது ‘ஆந்திர பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் பத்தின நியூஸ்…
அவரை யாரு முட்டாள்னு திட்டினதுன்னு பார்க்கறீங்களா…இந்தியாவுலயே பிரபலமான இயக்குனர்கள்ல ஒருத்தரான ராம் கோபால் வர்மா.
பிரச்சனை என்னன்னா, பவன் கல்யாண் அண்ணனான சிரஞ்சீவிக்கும், இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கும் ஆகாது. அதனால், அப்பப்ப பவன் கல்யாணை தூக்கி வச்சிப் பேசறது வர்மாவுக்கு வழக்கம்.
இதுவும் ரொம்ப ரொம்ப தூக்கி வச்சிப் பேசின ஒரு விஷயம்தான்.
பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா நடிச்ச ‘அத்தாரின்டிக்கி தாரெதி’ (அத்தை வீட்டுக்கு வழி எப்படி-ன்னு அர்த்தம்) என்ற தெலுங்குப் படம் போன வாரம் வெளியாகி உலகம் முழுக்க சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கு.
அதுக்காகத்தான் ராம் கோபால் வர்மா , பவன் கல்யாண் பத்தி ட்விட்டர்ல ஆவேசமா சில பல செய்திகளை போட்டிருக்காரு….
“மொத்த மும்பை திரையுலகமும் ‘அத்தாரின்டிக்கி தாரெதி’ படத்தோட வசூலைப் பத்திதான் பேசிக்கிட்டிருக்காங்க.
இந்த படத்தோட அளவுக்கதிகமான கலெக்ஷனைப் பார்த்து, அமெரிக்காவுல இருக்கிற வினியோகஸ்தர்களும், தியேட்டர் ஓனர்களும் ‘அத்தாரின்டிக்கி தாரெதி’-ன்னு சரியா உச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
பவன் கல்யாண் இமாலய உச்சிடைய அடைஞ்சிட்டாரு. ஆனால், 40 வருஷம் ஆகியும் சிரஞ்சீவி இன்னும் அடிவாரத்துலதான் இருக்காரு.
மெகா ஸ்டார் என்ற பட்டப் பெயர்லாம் பவர் ஸ்டார் பட்டத்துக்கு முன்னாடி ரொம்ப சின்னது. பவன் அவர் பேர சுனாமி ஸ்டார்னு மாத்தி வச்சிக்கணும்.
இந்த பூமியையே ஆட்டிப் படைக்கிற வெற்றி , அவரை விட அவருடைய ரசிகர்களாலதான் கிடைச்சுதுன்கறத பவன் கல்யாண் உணர்வாருன்னு நான் நம்பறேன்.
மக்கள் தன்னை இந்த அளவுக்கு நேசிக்கிறாங்கன்ற , ஆதாரத்தை புரிஞ்சிக்கிட்டும், பவன் கல்யாண் தனியா ஒரு கட்சி ஆரம்பிக்கலைன்னா அவர் தான் மிகப் பெரிய முட்டாள்,” என சொல்லியிருக்கிறார்.
இப்படி ராம் கோபால் வர்மாவின் ட்விட்டர் ஸ்டேட்டஸ்களை ஆந்திர மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
இது ஆந்திர திரையுலகத்திலும் விரைவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
