பள்ளி மாணவி….டீச்சரானார்…

lakshmi-menon 2சினிமாவில் மட்டுமே இப்படியெல்லாம் அதிசயம் நடக்கும். பள்ளி மாணவியான லட்சுமி மேனன், ‘பாண்டிய நாடு’ படத்தில் டீச்சராக நடிக்கிறார்.

‘கும்கி’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான லட்சுமி மேனன், தொடர்ந்து ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப்புலி’, போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

இப்போது, ‘பாண்டிய நாடு’, ‘சிப்பாய்’, ‘ஜிகர்தன்டா’, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘பாண்டிய நாடு’ படத்தில் டீச்சராக நடிக்கிறாராம். நிஜ வாழ்க்கையில் +1 படித்து வரும் லட்சுமி மேனன், இவ்வளவு சீக்கிரமே டீச்சர் கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

எனது ஆசிரியைகளை மனதில் வைத்துக் கொண்டு இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

லட்சுமியின் ராசி விஷாலுக்கும் கை கொடுக்கட்டும்…

Read Previous

நான் ரசித்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – இயக்குனர் சேரன் வீடியோ

Read Next

பவர் ஸ்டார் ஒரு முட்டாள் – ஆவேசப்படும் இயக்குனர்