திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் திரையுலகத்தைச் சேர்ந்த பலரது பாராட்டுதல்களையும் அள்ளி வருகிறது.
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில்தான் பொதுவாக பலரும் அவர்களது பாராட்டுக்களைத் தெரிவிப்பார்கள். ஆனால், சேரன் அவை எல்லாவற்றுக்கும் மேலாக யு டியுபில் வீடியோ வடிவில் படத்தைப் பற்றிய அவரது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்டது போது, “நல்ல திரைப்படங்களை நாம் ஆதரித்தால்தான் தமிழ் சினிமாவும் வளரும், நல்ல திரைப்படங்கள் தொடர்ந்து வர ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். இனி, நல்ல படங்கள் வரும் போது அதை ரசிகர்களுக்கும் மேலும் கொண்டு சேர்க்கும் விதத்தில் இந்த பணியைத் தொடர்ந்து செய்ய இருக்கிறேன், ” என்றார்.
வீடியோ – 1
வீடியோ – 2
