சினிமாவில் வந்த சம்பவம், நிஜத்தில் நடந்தது…

muthu nagaram_00003டந்த வாரம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘முத்து நகரம்’.

இந்த படத்தில் வந்த கதையைப் போன்றே நிஜத்திலும் ஒரு சம்பவம் நடந்து விட்டது என்று சொல்கிறார் படத்தின் இயக்குனர் திருப்பதி.

“இந்த படத்தின் கதையைப் பற்றி சொல்ல வேண்டுமானால் உல்லாசப் பறவைகளாய் சுற்றி திரிந்த நண்பர்கள் ஐந்து பேரை பொய்வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது போலீஸ். தண்டனை முடிந்து வெளியே வந்த ஐவரும் அதே போலீஸ் நிலையத்திற்கு போகின்றனர்.

அந்த போலீஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கி ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகிறனர். பொய்வழக்குப் போட்ட இன்ஸ்பெக்டர் மீது விசாரனை நடக்கிறது. இது தான் முத்து நகரம் படத்தின் கதை.

படம் வெளியான அதே நாளன்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடி என்ற ஊரில் உள்ள போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஒன்று களவு போயிருக்கிறது.

அந்த துப்பாக்கியை எடுத்து யாராவது தவறான செயல்களில் ஈடுபட்டால் தேவையில்லாமல் அந்த காவல் நிலைய காவலர்கள் விசாரணை வளையத்தில் சிக்கிக் கொள்வார்கள்,” என்றார் இயக்குனர் கே.திருப்பதி.

Read Previous

‘விழா’ – இப்படியும் ஒரு காதல்…

Read Next

மலேசியாவில் இளையராஜாவின் ‘King of the Kings’

Most Popular