‘விழா’ – இப்படியும் ஒரு காதல்…

vizha_00006த்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படியும் ஒரு காதலா என ஆச்சரியப்பட வைக்கும் படம்தான் ‘விழா’.

இழவு வீட்டில் நடக்கும் காதலை மையமாகக் கொண்ட படம் இது.  படத்தின் நாயகன் மகேந்திரேன் ‘பறை’ வாசிப்பவர், நாயகி மாளவிகா மேனன் ‘ஒப்பாரி’ பாடல் பாடுபவர்.

மதுரை பக்கத்து கிராமப் பின்னணியில் இழவு வீடுகளில் இவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது ஏற்படும் காதலை மிகவும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்களாம்.

‘நாளை இயக்குனர்’ நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாலசந்தர், கமல்ஹாசன் இருவரது பாராட்டுக்களையும் பெற்ற குறும்படமான இப்படத்தை வெள்ளித் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மாளவிகா மேனன் அறிமுகமாகிறார்.

ஜேம்ஸ் வசந்தன் இசையில் ‘சுப்பிரமணியபுரம்’ படத்திற்குப் பிறகு மதுரையின் மண் மனம் வீசும் பாடலகள் இடம் பெற்றுள்ளன.

இப்படத்தின் இசை வெளியீட்டு  விழாவில் பேசிய பாலசந்தர், பாரதிராஜா, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் விழா படத்தின் இயக்குனரான பாரதி பாலகுமாரனை வெகுவாகப் பாராட்டினர்.

‘பா’ வரிசை இயக்குனர்களில் பாலசந்தர், பாரதிராஜா ஆகியோருக்கு அடுத்து இப்படத்தின் இயக்குனர் இடம் பிடிப்பார் என அவர்கள் இருவருமே பாராட்டி இயக்குனரை ஆனந்த மழையில் நனைத்து விட்டார்கள்.

‘விழா’ – வெற்றி விழா கொண்டாடும் என எதிர்பார்க்கலாம்…

Read Previous

‘பாண்டிய நாடு’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்…

Read Next

சினிமாவில் வந்த சம்பவம், நிஜத்தில் நடந்தது…

Most Popular