‘பாண்டிய நாடு’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்…

pandiya naadu_00009விஷால், லட்சுமி மேனன், பாரதிராஜா, சூரி மற்றும் பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் தீபாவளிக்கு வரவிருக்கும் ‘பாண்டிய நாடு’ படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

முதலில் இந்த படத்திற்கு ‘யு-ஏ’ சர்டிபிகேட் வழங்கப்பட்டது. பின்னர் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

மீண்டும் படத்தைப் பார்த்த குழுவினர், படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் வழங்கினர்.

தீபாவளிக்கு வெளி வர உள்ள ‘ஆரம்பம்’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படங்களுக்கு ஏற்கெனவே ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டு விட்டது.

ஆக, தீபாவளிக்கு வெளிவரும் 3 படங்களுமே அனைவரும் பார்த்து ரசிக்கும் படமாக அமையுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Read Previous

ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம்…

Read Next

‘விழா’ – இப்படியும் ஒரு காதல்…