இளையராஜா பங்கு பெறும் ‘King of the Kings’ இசை நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 28ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வு சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
‘King of the Kings’ நிகழ்ச்சியில் இளையராஜா இசையமைத்த 1980களின் சூப்பர் ஹிட் பாடல்களை மட்டுமே வழங்க இருக்கிறார்கள்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம், மனோ, சித்ரா, ஷாலினி, ஹரிச்சரண் மற்றும் பல பின்னணிப் பாடர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இளையராஜாவின் மூத்த மகனும், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இந்த இசை நிகழ்ச்சியை வழங்குகிறார். இவருக்கு பக்கபலமாக இயக்குனர் வெங்கட் பிரபு இந்நிகழ்ச்சியில் கை கோர்க்கிறார்.
யுவன்ஷங்கர் ராஜா, பவதாரிணி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாட இருக்கிறார்கள்.
மலேசியாவில் உள்ள இளையராஜாவின் இனிமையான ரசிகர்களுக்கு இந்நிகழ்ச்சி செவிக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.