சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் 50வது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படம் 50வது நாளைக் கடந்ததை முன்னிட்டு சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குனர் பொன்ராம் ஆகியோர் சத்யராஜை சந்தித்து நன்றி தெரிவித்து மாலை அணிவித்தனர்.
சமீப காலமாக சத்யராஜ் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன.
‘ராஜா ராணி’ படத்திலும் நயன்தாராவிற்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருந்தார். அப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படமும் சூப்பர் ஹிட்டான படமாக அமைந்தது.
தமிழ் தவிர, தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் கலக்கி வருகிறார் சத்யராஜ்.