‘நய்யாண்டி’ படத்தில் தன்னை ஆபாசமாக படமெடுத்தார்கள் என்று சொல்லி பிரச்சனையை உருவாக்கிய நஸ்ரியா, தற்போது நடிக்கும் புதிய படத்தில் எந்த நிபந்தனையும் விதிக்காமல் நல்ல பெண்ணாக நடித்து வருகிறாராம்.
‘நய்யாண்டி’ படத்திற்குப் பிறகு பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நஸ்ரியா, தேவையற்று உருவாக்கிய சர்ச்சையால் , பல வாய்ப்புக்களை இழந்தார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன் பின், சில சீனியர்களின் அறிவுரைப்படி அவர் தன்னை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.
இப்போது, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் தமிழில் அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
“நஸ்ரியா எந்த பிரச்சனையும் செய்யயாமல், நல்லபடியாக ஃபோட்டோ ஷுட்டுக்கெல்லாம் வந்தார். கொடுத்த உடைகளில் எந்த பிரச்சனையும் செய்யாமல் அணிந்து வந்தார், ” என்கிறார் அப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன்.