ஆந்திர திரையுலகில் அழகாக வலம் வரும் அஞ்சலி…

anjali-latest-photoங்குதான் அஞ்சலியைக் காணோம், அவரைக் கண்டால் அடிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

ஆனால், அஞ்சலியோ ஆந்திரத் திரையுலகில் அழகாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் நடிக்கும் படத்தின் அனைத்து விழாக்களுக்கும் தவறாமல் கலந்து கொள்கிறார். தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்கிறார்.

சமீபத்தில் கூட வெங்கடேஷ் ஜோடியாக நடித்து வரும் ‘மசாலா’ என்ற படத்தின் பிளாட்டினம் டிஸ்க் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழில் புதிதாக எந்த படத்திலும் ஒப்பந்தமாகாத அஞ்சலி, தன்னை வளர்த்து விட்ட தமிழ் சினிமாவை முற்றிலுமாக மறந்து விட்டார் என்றேதான் தெரிகிறது. கடைசியாக ‘சிங்கம் 2’ படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடினார் அஞ்சலி.

அவரை வைத்து தற்போது தமிழில் படமெடுத்து வரும் இயக்குனர் களஞ்சியம், அஞ்சலி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதுவும் விசாரணையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ம்ம்ம்…அஞ்சலி என்ற அழகுப் புயல், ஆந்திராவை நோக்கி சென்று விட்டது.

Read Previous

ஆர்யா வாங்கிய ஏரியா…

Read Next

காமெடி த்ரில்லர் ‘இருக்கு ஆனா இல்ல’

Most Popular