காமெடி த்ரில்லர் ‘இருக்கு ஆனா இல்ல’

irukku ana illaவரம் கிரியேஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘இருக்கு ஆனா இல்ல’.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படம் ஒரு காமெடி த்ரில்லர். இப்படத்தை கே.எம். சரவணன் இயக்குகிறார். இவர் யூகி சேதுவிடம் சினிமா பயின்றவர்.

இப்படத்தில் விவந்த் கதாநாயகனாகவும், ஈடன், மனிஷா கதாநாயகிகளாகவும் நடிக்கிறார்கள். ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ ஆதவன், ஒய்.ஜி. மகேந்திரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஜுலை 15ம் தேதிய பதிவு செய்து, ஆகஸ்ட் 21ம் தேதி ஒப்புதல் பெற்றுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர்களான குவைத் வாழ் தமிழர்கள் சத்யா நாகராஜ், செல்லதுரை, சாமி பி.வெங்கட், பாலாமணி, ஜெயபாலன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நம் மண்ணின் மீதும், சினிமா மீதும் கொண்ட பேரன்பினால் வரம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து, பல புதிய கலைஞர்களுக்கு வரமாக இந்நிறுவனம் இருக்க வேண்டும் என்றுதான் தங்களது நிறுவனத்திற்கு வரம் கிரியேஷன்ஸ் என பெயர் வைத்திருக்கிறார்களாம்.

சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 60 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள இப்படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு குவைத் நாட்டில் நடைபெற உள்ளது.

Read Previous

ஆந்திர திரையுலகில் அழகாக வலம் வரும் அஞ்சலி…

Read Next

சூர்யா – லிங்குசாமி படம் அடுத்த வாரம் ஷுட்டிங்…