தலைப்பைப் பார்த்ததும் ஆர்யா ஏதோ ஒரு ரியல் எஸ்டேட்ல வர்ற ஏரியாவை வாங்கிட்டார்னு நினைச்சிடாதீங்க.
சும்மா, ரைமிங்கா இருக்கட்டுமேன்னுதான் அப்படி ஒரு தலைப்பு.
விஷயம் என்னன்னா, ஆர்யா, ‘இரண்டாம் உலகம்’ படத்தோட ஒரு ஏரியாவை வாங்கியிருக்காரு.
எப்எம்ஸ்-னு சொல்லப்படற வெளிநாட்டு உரிமை, அதாவது மலேசியா, சிங்கப்பூர்ல ‘இரண்டாம் உலகம்’ படத்தை திரையிடற உரிமைய ஆர்யா வாங்கியிருக்காராம்.
ஏற்கெனவே, ‘படித்துறை’ங்கற படத்தை தயாரிச்சி அப்புறம் டிராப் பண்ணிட்டாரு ஆர்யா.
தயாரிப்பாளரா சினிமா சரியா கை கொடுக்கலன்னுதான் இப்ப ஆர்யா , விநியோகஸ்தரா மாறிட்டாரோ…