‘கோச்சடையான்’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா ?

kochadaiyan-songரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘மோஷன் கேப்சரிங்’ படமான ‘கோச்சடையான்’ படத்தின் வெளியீடு எப்போது என்பதைப் பற்றிய பல தகவல்கள் உலவி வருகின்றன.

முதலில் இந்த படம் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர்  12ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் பாடல்கள் வெளியீடு இன்னும் நடைபெறவேயில்லை.

இதனிடையே, படத்தின் பல முக்கியமான கிராஃபிக்ஸ் காட்சிகளின் உருவாக்கம் முடியவில்லை, அவை சீனாவில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் வெளியீடு, பொங்கலுக்கோ, அல்லது கோடை விடுமுறையின் போதோ இருக்கலாம் எனவும் சொல்கிறார்கள்.

கமல்ஹாசனின் ’விஸ்வரூபம் 2’ படத்தின் வெளியீட்டுத் தேதியும் சரியாகத் தெரிய வராததால், அஜித்தின் ‘வீரம்’, விஜய்யின் ‘ஜில்லா’ படத்தை எப்படி வாங்குவது என்றும் விநியோகஸ்தர்கள் யோசிக்கிறார்களாம்.

ஆக, பொங்கலுக்கு முன்னதாக ‘கோச்சடையான், விஸ்வரூபம் 2, வீரம், ஜில்லா’ ஆகிய படங்களைப் பற்றிய செய்திகள் மீடியாக்களில் அடிபட்டுக் கொண்டேயிருக்கும்.

Read Previous

பெண்களை மையமாகக் கொண்ட படங்களே வருவதில்லை – சுஹாசினி ஆதங்கம்

Read Next

ஆர்யா வாங்கிய ஏரியா…