பெண்களை மையமாகக் கொண்ட படங்களே வருவதில்லை – சுஹாசினி ஆதங்கம்

malini 22 audio launch80களின் ஹிட் நடிகையான ஸ்ரீப்ரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் படம் ‘மாலினி 22 பாளையம்கோட்டை’ .

இந்த படத்தின் இசை வெளியீடு இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் கமல்ஹாசன் படத்தின் இசையை வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார். டிரைலரை இயக்குனர் கே.பாலசந்தர் வெளியிட, விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.

80களின் நாயகிகளான ராதிகா சரத்குமார், சுஹாசினி, லிஸி பிரியதர்ஷன், எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த சீனியர் நடிகை லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சுஹாசினி, “தற்போது பெண்களை மையப்படுத்திய படங்களே வருவதில்லை. 80களில் நான், ராதிகா, ஸ்ரீபிரியா உட்பல பலரும் பெண்களை மையப்படுத்திய கதை கொண்ட பல படங்களில் நடித்திருக்கிறோம்.

ஆனால், இப்போதெல்லாம் அப்படிப்பட்ட படங்களே வருவதில்லை. காதல்,  நகைச்சுவை என்ற விதத்திலேயே படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது சமநிலை இல்லாத விதத்திலேயே உள்ளது, ” என்றார்.

பின்னர் பேசிய ராதிகா சரத்குமார், “இன்றைய பல படங்களில் டாஸ்மாக் காட்சிகளும், காலையில் எழுந்ததும், இரு நண்பர்கள் எந்த பெண்ணை சைட் அடிப்பது என்று பேசும் காட்சிகள் கொண்ட படங்களே அதிகமாக வருகின்றன. அப்பாவும், மகனும் கெட்ட வார்த்தைகளில் பேசிக் கொள்வது போன்ற வசனங்களும் இடம் பெறுகின்றன என்று சொல்லிவிட்டு, அந்த வசனத்தை வேறு பேசி வந்திருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

“மாலினி 22 பாளையம்கோட்டை’ திரைப்படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘FEMALE 22 KOTAYAM” என்ற படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.

அரங்கில் திரையிடப்பட்ட டிரைலரும்,  பாடல்களும் நிச்சயம் இந்த படம் பெண்ணின் பெருமையைப் பேசும் படமாக இருக்கும் என்பதை புரிய வைத்தது.

தமிழிலும் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துவோம்.

Read Previous

S.P.சரண் தயாரிப்பில் ‘திருடன் போலீஸ்’

Read Next

‘கோச்சடையான்’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா ?

Most Popular