சிம்பு – பாண்டிராஜ் படம் ‘பரபரப்புத் தகவல்’…

simbu-pandiraj-film-photo-6சிம்பு என்றாலே அங்கே வம்பு என்றாகிவிட்டது. சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் கூட சிம்பு அது குறித்து வருத்தப்பட்டிருந்தார்.

அது தொடர்கதையாகி வருவதுதான் விஷயம்.

‘பசங்க, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களின் இயக்குனர் பாண்டிராஜ் – சிம்பு முதன் முறையாக இணைந்து பணியாற்றி வரும் படம் ‘டிராப்’ ஆகி விட்டது என கடந்த சில நாட்களாக இணையதளங்களில் செய்தி வெளியாகி வருகின்றன.

ஆனால், அதில் துளி கூட உண்மையில்லையாம். சிம்பு, திடீரென கௌதம் மேனன் படத்தில் நடிக்கப் போனதுதான் இந்த செய்தி, வம்பாக மாறியதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

இது பற்றி நாம் இயக்குனர் பாண்டிராஜிடம் விசாரித்த போது அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இன்னும் சில நாட்களுக்குள் படத்தின் ஹீரோயின் யார் என்பதையும் மற்ற விவரங்களையும் அறிவிக்க இருக்கிறோம், மற்றவர்கள் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை என்றார்.

வதந்திக்கு சிறகு முளைச்சி பறக்கறதுக்குள்ள சீக்கிரம் சொல்லிடுங்க…

Read Previous

சச்சின் ‘டாட்டூ’வை கையில் குத்திக் கொண்ட கவர்ச்சி நடிகை…

Read Next

தப்பா எழுதக் கூடாதுன்னு ‘தகராறு’ பேர் வச்சோம் – அருள்நிதி

Most Popular