தப்பா எழுதக் கூடாதுன்னு ‘தகராறு’ பேர் வச்சோம் – அருள்நிதி

arulnidhi thagararuரசியல் குடும்பத்து வாரிசு அருள்நிதி, தன்னை அரசியல் வாரிசாக பார்க்க வேண்டாம், ஒரு நடிகனாக மட்டுமே பாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அருள்நிதி, பூர்ணா மற்றும் பலர் நடிக்கும் ‘தகராறு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று முன்னர் நடைபெற்றது.

அப்போது பேசிய அருள்நிதி,

“யாரும் என்னை ஒரு அரசியல் குடும்பத்தோட வாரிசா பார்க்காதீங்க. ஒரு நடிகனா பாருங்க.

ஆக்சுவலா இந்த படத்துக்கு நாங்க முதல்ல வச்ச பேரு ‘பகல் கொள்ளை’. எல்லாரும் கலாய்ச்சி எழுதுவீங்கன்னுதான் ரொம்ப தேடிப் பிடிச்சி இந்த ‘தகராறு’ன்னு தலைப்பு வச்சோம்.

இந்த படம் என்னை ஒரு முழுமையான நடிகனா வெளிப்படுத்தும். ‘வம்சம்’ படத்துல அறிமுகமாகி அப்புறம் சில படங்கள்ல நடிச்சாலும், இந்த படத்துல என்னோட இயல்பான கேரக்டரை வெளிப்படுத்தக் கூடிய காட்சிகள் உள்ள படமா இந்த படம் அமையும்.

வீட்டுல , அம்மா கூட அடிக்கடி சொல்வாங்க. இங்க நல்லா பண்ணு, நடிக்கும் போதும் எதையும் பண்ணாதன்னுவாங்க. என் கிட்ட இருக்கிற சின்னச்சின்ன சுவாரசியமான விஷயங்களை வெளிப்படுத்தற மாதிரி இந்த படத்துல நல்ல காட்சிகள் அமைஞ்சிருக்கு.

நிச்சயம் இந்த படம் உங்க எல்லாருக்கும் பிடிக்கும்,” என்றார்.

முன்னதாக பேசிய இயக்குனர் கணேஷ் விநாயக், “இந்த படம் பெரிய சாதனை படைக்குமா இல்லையான்னு தெரியாது, ஆனால் எல்லாருக்கும் அடுத்த படம் கண்டிப்பா கிடைக்கும், ” என்றார்.

Read Previous

சிம்பு – பாண்டிராஜ் படம் ‘பரபரப்புத் தகவல்’…

Read Next

தனுஷ் ஜோடியாக கமல்ஹாசனின் இளைய மகள்…

Most Popular