சச்சின் டென்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து கடந்த வாரம் ஓய்வு பெற்றார். அவருக்கு பலரும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அவர்களில் சிலர் வித்தியாசமான முறையில் ஏதாவது செய்து ரசிகர்களை கவர்கின்றனர்.
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, சச்சின் உருவம் கொண்ட டாட்டூவை தன்னுடைய வலது கையில் பதித்துக் கொண்டுள்ளார்.
இவர் ஏற்கெனவே இந்தியா 2011ம் ஆண்டு உலகக் கோப்பைய வென்றால் ஆடையில்லாமல் வலம் வரத் தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
சச்சின் விளையாடிய கடைசி டெஸ்ட் மும்பையில் நடைபெற்ற போது கடைசி நாள் போட்டியைக் காண வந்தவர்களில் பூனம் பாண்டேவும் ஒருவர்.
அன்றுதான் இப்படி டாட்டூ குத்தி மீடியாக்களுக்கு செய்தியானார்.
நல்ல வேளை சச்சின் டாட்டூவை கையில் குத்திக் கொண்டார்….