அஜித்குமார் – கௌதம் மேனன் முதன் முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.
இப்படம் பற்றிய முறையான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியாகியது.
இதனிடையில் குறுகிய கால இயக்கமாக சிம்பு நடிக்கும் படத்தை கௌதம் மேனன் கடந்த வாரம் ஆரம்பித்தார்.
“ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மீண்டும் ஷுட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளேன், ” என இது பற்றி கௌதம் குறிப்பிட்டுள்ளார்.
இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் கௌதம் மேனன் சிம்பு படத்தை இயக்க ஆரம்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்படியென்றால் அஜித்தை வைத்து இயக்கும் படம் என்னவாயிற்று என்ற கேள்வியும் எழுந்தது.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதத்தில் கௌதம் மேனன் நேற்று அஜித் படம் பற்றிய தகவலை வெளியிட்டார்.
அதோடு, கௌதம் மேனன் ஒரு புதிய படம் ஒன்றையும் தயாரிக்கிறார். இப்படத்தை ‘போடா போடி’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஆரம்பமாகிறது. படத்திற்கு ‘நானும் ரவுடிதான்’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.