ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான என்டிடிவியின் ‘உலகில் சிறந்து வாழும் இந்திய சாதனையாளர்கள்’ ( India’s Greatest Global Living Legends) கருத்துக் கணிப்பில் 25 சாதனையாளர்களுக்கு நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனைவருக்கும் விருது வழங்கி கௌரவித்தார்.
தமித் திரையுலகத்தைச் சேர்ந்த ரஜினிகாந்தும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும் 25 சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்று நேற்று விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
அப்போது ரஜினிகாந்த் பேசியதாவது, “பலர் அதிசயம் ஏற்படுவதை நம்ப மாட்டார்கள். அதிசயம் நடந்து கொண்டுதானிருக்கும். ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்தவரும் சாதனையாளர்களுடன் ஒரே மேடையில் அமர முடியும் என்பது அதிசயம்தானே.
குடியரசுத் தலைவருக்கும், என்டிடிவிக்கும் இந்த மதிப்பு மிக்க விருதைக் கொடுத்ததற்காக என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கௌரவத்தை எனக்கு தாயும் தந்தையுமாக இருக்கும் என் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட், எனது குரு கே.பாலச்சந்தர் , தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்களது அன்பும், ஆதரவும் இல்லாமல் நான் இங்கு நின்றிருக்க முடியாது. மிக்க நன்றி,” எனப் பேசினார்.
Video Courtesy – NDTV