‘வீரம்’ இசை 20ம் தேதி வெளியீடு…

ajith-tamannah-in-veeramவிஜயா புரொடக்ஷன்ஸ் பாரதி ரெட்டி மற்றும் வெங்கட்ராம ரெட்டி தயாரிக்க சிவாவின்  இயக்கத்தில் தேவிஸ்ரீ  பிரசாத் இசை அமைக்க  மிக பிரம்மாண்டமாக தயாராகும்  ‘வீரம்’  படத்தின் இசை  இம்மாதம் 20ஆம் தேதி  வெளியாகிறது.

அஜீத் குமார் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் நாசர்,அதுல் குல்கர்னி,  ரமேஷ் கண்ணா,  விதார்த், பாலா, சந்தானம் , முனீஸ் , சுஹைல் , தம்பி ராமையா,  அப்பு குட்டி , மயில் சாமி, சுமித்ரா, சுஜாதா, ரோஹினி அட்டங்காடி , அபிநயா, மனோ சித்ரா, சூசாகுமார், தேவதர்ஷினி ,வித்யு லேகா, என்று  ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது .

அஜீத் ரசிகர்களை கவரும் வண்ணம் ‘ மாஸ்’  பாடல்களை  தேவிஸ்ரீ பிரசாத் வழங்கி  உள்ளார் , அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று இயக்குனர்  சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘ வீரம் ‘  பாடல்களில் மட்டுமின்றி , கதை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக , ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார் .

வெற்றியின் ஒளிப்பதிவில் , மிலனின்  கலை வண்ணத்தில் , காசி விஸ்வநாதனின் படத் தொகுப்பில் ,செல்வாவின்  சண்டை காட்சி அமைப்பில் , தினேஷ்  நடனம் அமைக்க , விவேகா  பாடல் வரிகளுக்கு , தேவி ஸ்ரீ பிரசாத்  அட்டகாசமான  இசையை தந்துள்ளார் .

ஜனவரி10, 2014 அன்று ‘வீரம்’ உலகெங்கும் வெளியாகிறது.

 

Read Previous

இவன் வேற மாதிரி – விமர்சனம்

Read Next

நான் ஒரு அதிசயம் – ரஜினிகாந்த் பேச்சு