நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி ‘49-ஓ’ (49-O) என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமானது.
சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கவுண்டமணி டாக்டராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து கவுண்டமணி நாயகனாக நடிக்கும் படம்தான் ‘49-ஓ’ (49-O) .
இயக்குனர் கௌதம் மேனன் உதவியாளரான ஆரோக்கிய தாஸ் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக நடிக்கிறார். அவர்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் படமாக இப்படம் அமையும். அதே சமயம் நகைச்சுவைக்கும் முக்கியத்தும் உள்ள படமாகவும் இருக்கும்.
முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே குன்றத்தூரில் நேற்று ஆரம்பமாகி பொங்கல் வரை நடைபெற உள்ளது.
‘49-ஓ’ (49-O) என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதி. இந்த விதியின் நோக்கம் வாக்குச்சீட்டுக்களின் தவறான பயன்பாட்டையும் ஏமாற்றலுகளையும் தடுப்பதாகும்.
A Real Comedy King Comes Back…
‘அலர்ட்டா இருந்துக்கடா ஆறுமுகம்’….