2013ம் ஆண்டில் ‘எதிர் நீச்சல், வணக்கம் சென்னை’ படங்களில் நடித்தவரும் தற்போது ‘வை ராஜா வை, அரிமாநம்பி, இரும்புக் குதிரை’ ஆகிய படங்களில் நடித்து வரும் பிரியா ஆனந்த் அடுத்து விமல் ஜோடியாக நடிக்க உள்ளார்.
குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக மைக்கேல் ராயப்படன் தயாரிக்க உள்ள இந்த படத்தை ‘ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய கண்ணன் இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விமல் ஜோடியாக நடிப்பதற்கு பிரியா ஆனந்த்திற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இத்தனைக்கும் விமல் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்த படம்.
அப்படியிருந்தும் அவருடன் ஜோடியாக நடிக்க பிரியா ஆனந்த் இவ்வளவு சம்பளம் கேட்டது ஆச்சரியமாக உள்ளது என திரையுலக நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அநேகமாக, அவருடைய சம்பளம் விமலுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட அதிகமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்…
ஏற்கெனவே, பிரியா ஆனந்த் ஒரு கோடி சம்பளம் கேட்டதாக செய்திகள் வந்த நிலையில், அவர் அதை மறுத்தார்.
இப்போது, இந்த செய்தியையும் அவர் விரைவில் மறுப்பார் என எதிர்பார்க்கலாம்.