தோல்விப் பட இயக்குனருக்கு சம்பளம் 4 கோடி ?

director saravananசினிமாவில் திறமையிருந்தும் அதிர்ஷ்டத்தால் மட்டுமே முன்னேறுபவர்கள் ஒரு சிலர்.

என்னதான் திறமையிருந்தாலும் நேரமும், காலமும் சரியாக அமையவில்லை என்றால் வெற்றி பெற முடியாது என்று திரையுலக அனுபவசாலிகள் சொல்வார்கள்.

அப்படித்தான் பலர் இன்னும் நல்ல நேரத்திற்காக காத்திருக்கிறார்கள்.

சிலருக்கோ கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கிறது.

‘எங்கேயும் எப்போதும்’ என்ற வெற்றிப் படத்தையும் ‘இவன் வேற மாதிரி’ என்ற தோல்விப் படத்தையும் கொடுத்த இயக்குனர் சரவணனுக்கு அடுத்த படம் இயக்க சம்பளம் 4 கோடி என்கிறார்கள்.

அந்த சம்பளத்தைக் கொடுக்கப் போவதும் அவருடைய குருநாதர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்தானாம்.

இரண்டாவது படமாக தோல்விப் படத்தைக் கொடுத்தவருக்கு இவ்வளவு பெரிய சம்பளமாக என கோலிவுட்டில் வாய்ப்புத் தேடி அலையும் பலர் வாயைப் பிளக்கிறார்கள்.

வேறு பட நிறுவனத்தில் இயக்கம் செய்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என இதுநாள் வரை இந்த வாய்ப்பை தட்டிக் கழித்து வந்தாராம் சரவணன். ஆனால், இவருடைய எண்ணத்தைப் புரிந்து கொண்ட முருகதாஸ் 4 கோடி சம்பவளம் தருவதாக சொன்னதும் சம்மதித்தாராம் சரவணன்.

ஒரு கட்டத்தில் பணம், திறமையை சாமர்த்தியமாக சாப்பிட்டு விடுகிறது…

Read Previous

’தூம் 3’ – வெளிச்சத்துக்கு வராத விவகாரம்…

Read Next

விமல் ஜோடியாக நடிக்க பிரியா ஆனந்துக்கு அதிக சம்பளம்…