‘தூம் 3’ வெளியான ஒரு வாரத்திலேயே 300 கோடி ரூபாயைக் கடந்து மாபெரும் சாதனை புரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், இந்த படத்தைப் பற்றி வெளி உலகத்திற்கு வெளிவராத ஒரு தகவல் உள்ளது.
இதைப் பற்றி ‘வெயில், அங்காடித் தெரு, அரவான்” படங்களின் இயக்குனரும், தற்போது ‘காவியத் தலைவன்’ படத்தைத இயக்கி வரும் வசந்தபாலன் அவருடைய ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
“நேற்று தூம் 3 படத்திற்கு போனேன்.
பிரம்மாண்டங்கள், சர்க்கஸ், சேஸ், கேத்ரினா கைப்பின் நடனம் என கண்ணை இமைக்கவிடாமல் இருந்தது.
தூம் படத்தின் திரைக்கதையமைப்பு
அரவான் ரிலீஸ்க்கு முன்பு அதாவது 2 வருடத்திற்கு முன்பு
நான் எழுதிய திரைக்கதையமைப்பை ஒத்து இருந்தது.
என் கதைவிவாதத்தில் கலந்து கொண்ட
உதவி இயக்குனர்கள் அறிவார்கள்.
கதை கேட்ட நடிகர் கார்த்தி,விஜய்,
இயக்குனர் லிங்குசாமி,தயாரிப்பாளர் போனிகபூர் போன்றோர் அறிவார்கள்.
இதுவும் கடந்து போகும்….” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்து போகவில்லை…கடத்திக் கொண்டு போய் விட்டார்கள்…?