சொன்னதைச் செய்தார் விவேக்…

naanthan bala audio launch news

ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே மேடையில் ஒரு 30 பேராவது உட்கார வைக்கப்பட்டு, ஒவ்வொருவராக பேசி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

இதைப் பற்றி நேற்று சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘அது வேற இது வேற’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக்கும் பேசினார். அது மட்டுமல்ல நல்ல யோசனை ஒன்றையும் தெரிவித்தார். (நேற்றைய செய்தியை படிக்க…)

இன்று அதே மேடையில் விவேக் நாயகனாக நடிக்கும் ‘நான்தான் பாலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. நேற்று சொன்னதை தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிகழ்த்திக் காட்டி நல்லதொரு முன்னுதாரணமாய் திகழ்ந்தார் விவேக்.

இன்று நடைபெற்ற விழாவில் மேடையில் வெறும் 6 பேர் மட்டுமே உட்கார வைக்கப்பட்டனர்.

இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் மட்டுமே அந்த ஆறு பேர்.

விழாவுக்கு வந்த ரசிகர்களுக்கும், குறிப்பாக தொடர்ந்து இம்மாதிரியான விழாக்களில் கலந்து கொண்டு வரும் பத்திரிகையாளர்களுக்கும் இன்று நடைபெற்ற விழா உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

காரணம், வளவளவென்ற வெட்டிப் பேச்சுகள், தேவையற்ற விவாதங்கள் என்றில்லாமல் அழகாக , அருமையாக விழா நடைபெற்றது.

இதை இனி வரும் நாட்களில் அனைவரும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்….

‘நேற்றோடு நான் சொன்ன வார்த்தை, காற்றோடு போயாச்சு…’ என்று விட்டு விடாமல், சொன்னதைச் செய்து காட்டிய விவேக்கிற்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்…

Read Previous

‘விஷால் – ஸ்ருதிஹாசன் – ஹரி’ – புதிய கூட்டணி

Read Next

’தூம் 3’ – வெளிச்சத்துக்கு வராத விவகாரம்…