‘விஷால் – ஸ்ருதிஹாசன் – ஹரி’ – புதிய கூட்டணி

vishalவிஷால் ஹீரோவாக நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஹரி இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கப் போகிறார்.

விஷாலின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபேக்டரி இந்த படத்தைத் தயாரிக்கிறது.

விஷால் தற்போது, திரு இயக்கத்தில் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார். ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வர வாய்ப்புள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், ஹரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

ஹரி – விஷால் இதற்கு முன் இணைந்து ‘தாமிரபரணி’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைகிறது.

இந்த புதிய படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மற்ற விவரங்கள் விரைவில்…

Read Previous

மேடையில சீட்டை குறைவா போடுங்க – நடிகர் விவேக் யோசனை

Read Next

சொன்னதைச் செய்தார் விவேக்…

Most Popular