மேடையில சீட்டை குறைவா போடுங்க – நடிகர் விவேக் யோசனை

actor vivekகளிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற” இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது.

வரவேற்று பேசிய தயாரிப்பாளர் G.ஜெயசீலன் காவல்துறையில் இருந்த நான் இந்த துறைக்கு வந்த பிறகுதான் இது எவ்வளவு சிரமத்திற்கு உள்ளான தொழில் என்று புரிந்து கொண்டேன் புதிதாக படம் தயாரிக்க வருபவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். அல்லது ஒரு வாரம் அவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும் அப்போதுதான் முறையான படி நல்ல படம் எடுக்க முடியும்,” என்றார்.

விழாவில் பேசிய நடிகர் விவேக்,

“இப்பலாம்  ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனுக்கு பல பெரிய மனிதர்கள் வருவதற்கே  தயங்குகிறார்கள், பயப்படுகிறார்கள். அதுக்குக் காரணம் என்னன்னா எதிர்ல இருக்கிறவங்களுக்கு போடற சீட்டை விட, மேடையில போடற சீட்டு அதிகமாக இருக்கு.

கிட்டத்தட்ட 30 பேரை மேடையில உட்கார வைக்கிறாங்க. அது என்னன்னா,  எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும், மதிக்க வேண்டும்கற நல்ல எண்ணத்துல செய்யறாங்க. அது தப்பில்லை. ஆனால், உட்கார்ந்திருக்கிறவங்க டென்ஷனை யோசிச்சிப் பாருங்க.

ஒவ்வொருத்தரா பேசிட்டு வரும் போது, அடடா…நம்ம பாயின்ட்டை, இவங்க பேசிட்டாங்களே…நாம என்ன பேசறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. இந்த டென்ஷன்லயே அந்து அவலாகி, நொந்து நூடுல்சாகிடுவாங்க. அவருடைய முறை வந்து என்ன பேசறதுன்னு தெரியாமப் போயிடும்.

இந்த மாதிரி ஃபங்க்ஷன்ல மேடையில உட்கார வைக்கிறத கொஞ்சம் சுருக்கிக்கலாம். இனி வரும் ஃபங்க்ஷன்ல ஆடியோ விழாக்களை ஆடியோ சிடி அளவுல சுருக்கிக்கலாம். இப்பலாம் ஃபங்க்ஷன்க் எல்பி ரிக்கார்ட் அளவுக்கு பெருசா நடக்குது.

வாழ்த்தும் இதயங்களை முன் வரிசையில உட்கார வச்சிட்டு, படத்தோட இசை சம்பந்தப்பட்டவங்களை மட்டும் இந்த மாதிரி விழாக்கள்ல  பேச வைக்கலாம், ” என்ற நல்ல யோசனையை எடுத்து வைத்தார் விவேக்.

விழாவில் ஆர்.பி.சௌத்திரி, விக்ரமன், நாசர், விவேக், கமிலா நாசர், கே.எஸ்.சீனிவாசன், ஈ.ராம்தாஸ், பேரரசு, சித்ராலட்சுமணன்,கே.ராஜன்,ஜி.சிவா, எஸ்.ஏ.ராஜ்குமார்,நா.முத்துகுமார்  விவேகா,ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சிதம்பரம் செல்வராஜ், இசையமைப்பாளர்    தாஜ் நூர்,கதாநாயகன் வர்ஷன், கதாநாயகி சானியா தாரா, இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசினார்கள்.

இயக்குனர் திலகராஜன் நன்றி தெரிவித்தார்.

நாளை காலை விவேக் நாயகனாக நடிக்கும் ‘நான்தான் பாலா’ படத்தின் இசை வெளியீடு இதே திரையரங்கில் நடைபெற உள்ளது. பார்ப்போம், விவேக் மேடையில் எத்தனை சீட் போடுகிறார் என்று…

ஏனென்றால், பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் பாடல்களையும், டிரைலரையும் வெளியிட இருக்கிறார்கள்.

விழாவில் கலந்து கொள்ளும் விஐபிக்களுக்கு பஞ்சமே இருக்காது. உட்காரவாவது இடம் கிடைத்தால் சரி…

 

Read Previous

தேடி வராதவர்களை நான் சிந்திப்பதில்லை – வைரமுத்து

Read Next

‘விஷால் – ஸ்ருதிஹாசன் – ஹரி’ – புதிய கூட்டணி