எம்ஜிஆர் – சரோஜா தேவி, சிவாஜி – கேஆர். விஜயா, கமல் – ஸ்ரீதேவி, ரஜினி – ஸ்ரீப்ரியா, சூர்யா – ஜோதிகா தமிழ்த் திரையுலகில் சிறந்த பொருத்தமான ஜோடிகளாகப் பேசப்பட்டவர்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பாண்டிய நாடு’ வெற்றிப் படத்தின் மூலம் 2013ம் ஆண்டில் சிறந்த பொருத்தமான ஜோடி என பேசப்பட்டவர்கள் விஷால் – லட்சுமி மேனன்.
அந்த படத்தில் அவர்களுடைய கெமிஸ்ட்ரி, ஹிஸ்டரி, ஜியாகரபி எல்லாமே சூப்பரா ஒர்க் அவுட் ஆச்சின்னு சொன்னவங்க நிறைய பேர்.
அதனாலதான், இந்த ஜோடி மீண்டும் திரு இயக்கத்தில் உருவாகி வரும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இணைந்திருக்கிறது.
இந்த படத்தில் முத்தக் காட்சி ஒன்றில் விஷால், லட்சுமி மேனன் நடித்துள்ளதாக செய்கிள் வெளியாகியுள்ளன.
படத்திற்குத் தேவையான ஒரு முக்கியமான காட்சியில் அந்த முத்தக் காட்சி இடம் பெறுகிறதாம். இதைப் பற்றி படத்திற்கு கதை சொல்லும் போதே லட்சுமி மேனனிடம் விளக்கி விட்டாராம் இயக்குனர் திரு.
அந்த முத்தக்காட்சியை எந்த விதமான ஆபாசமின்றி , கவிதைய நயமாக காட்சிப்படுத்தியிருக்கிறாராம் இயக்குனர்.
ம்ம்..இதை எழுதும் போது ‘பாண்டியநாடு’ படத்தோட பாட்டுதான் ஞாபகம் வருது…
“வெக்கத்தை வேணான்னு ஓட்டி ஃபை…
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை…
முட்டாயி முத்தத்தை வாயோடு வாய் வச்சி…”
அடுத்த படத்துக்கு முன்னாடியே யோசிச்சி பாட்டு எழுதிட்டாங்களோ…
முத்தக்காட்சி ஆயிற்றே…அதனால்தான் இந்த செய்தியை முந்தித் தருகிறோம்…