மலையாளப் படத்தில் சந்தானம்…

santhanam 3112மிழ்த் திரையுலகின் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகரான சந்தானம், மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார்.

சரத் ஏ.ஹரிதாசன் இயக்கத்தில் கோபி சுந்தர் இசையமைப்பில் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நஸ்ரியா மற்றும் பலர் நடிக்கத் தயாராகி வரும் மலையாளப் படம் ‘சலாலா மொபைல்ஸ்.’

இப்படத்தின் மூலமாகத்தான் சந்தானம் மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார்.

அழகர்சாமி, என்ற மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பராக இந்த படத்தில் நடிக்கிறார் சந்தானம்.

இதைப் பற்றி இயக்குனர் சரத் கூறுகையில், “இப்படத்தின் கதையை நான் உருவாக்கிய போதே இந்த கதாபாத்திரத்தில் சந்தானம்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.

இதுவரை தமிழில் கூட சந்தானம் இம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார்.  இந்த படத்தில் அவரை நடிக்க வைப்பதற்காக நீண்ட நாட்களாகவே காத்திருந்தோம். ஆனால், அந்த காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைத்தது.

இந்த கதாபாத்திரத்திற்காக சந்தானம் மிகவும் சிரத்தை எடுத்து நடித்துக் கொடுத்தார்.”

சந்தானத்தின் நகைச்சுவை மனம் இனி மலையாள தேசத்திலும் வீசப் போகிறது…

 

Read Previous

முத்தக்காட்சியில் விஷால் – லட்சுமி மேனன் !?

Read Next

இந்த ஆண்டின் ‘பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ’ சிவகார்த்திகேயன்…

Most Popular