‘சுந்தரபாண்டியன், குட்டிப்புலி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடரந்து சசிகுமார் தற்போது ‘பிரம்மன்’ என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாடர்ன் இளைஞராக நடித்து வருகிறார்.
ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட் என அவர் இதுவரை நடித்த கிராமம் சார்ந்த கதாபாத்திரங்களிலிருந்து மாறி சிட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சந்தானம், சூரி வேறு கலக்குகிறார்களாம். சசிகுமார் ஜோடியாக புதுமுகம் லாவன்யா நடிக்கிறார். புது இயக்குனர் சாக்ரடீஸ் படத்தை இயக்க, தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இப்போதெல்லாம் ஒரு படம் பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் ‘ஃபேஸ்புக், ட்விட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இன்னும் ஏன், ஒரு படத்தின் டிரைலரைக் கூட ‘யு டியூப்’பில்தான் முதலில் வெளியிடுகிறார்கள். எல்லாம் ‘கொலை வெறி’ தந்த இலவச விளம்பரம்.
ஆனால், சசிகுமாரோ தனக்கு ‘ஃபேஸ்புக், ட்விட்டர்’ ரசிகர்கள் தேவையில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
“இவை எவற்றிலும் நான் கணக்கு வைத்திருக்கவில்லை. என் படம் ஓடுத் தியேட்டர்களில் என்ன ஓடுகிறது என்பதுதான் என் கவலை.
அங்கதான் சினிமா பிடிச்சவங்க, பிடிக்காதவங்க, பேஸ்புக்ல அக்கவுன்ட் வச்சிருக்கிறவங்க, வச்சிக்காதவங்க இப்படி பல பேர் படம் பார்க்க வர்றாங்க. படம் நல்லா இல்லன்னா, அவங்களை ஆபரேட்டரைப் பார்த்து சவுன்ட் விடுவாங்க. அந்த ரசிகர்கள் போதும் எனக்கு.
இன்னும் சொல்லப் போனால், ‘ஃபேஸ்புக், ட்விட்டர்’ல அடிக்கிற கமென்ட்டை விட அங்கதான் கமென்ட் அதிகம் அடிப்பாங்க, ” என்கிறார் சசிகுமார்.
அப்ப…இனி, சசிகுமார் கிட்ட ‘ஃபேஸ்புக், ட்விட்டர்’ கமென்ட்ஸ்லாம் ‘செல்லாது…செல்லாது’….