‘நாங்க எல்லாம் அப்பவே அப்படி’ – இது படத்தோட டைட்டில்..எப்புடி..?

Denikaina Ready Movie Photos Webparx (5)பல மொழி மாற்றுப் படங்களை தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் எஸ்.சுந்தரலட்சுமி தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற “தேனிகைன ரெடி” என்ற படத்தை தமிழில் ”நாங்க எல்லாம் அப்பவே அப்படி”  என்ற பெயரில் மொழிமாற்றம் செய்கிறார்கள்.

கதாநாயகனாக விஷ்ணு மோகன்பாபு நடிக்கிறார். கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.

மற்றும் சீதா, சுமன், பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ், ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தனது தங்கை இன்னொரு மதத்தைச் சேர்ந்தவருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டதால், கோபப்பட்ட பிரபுவின் ஆட்கள் சுமனின் காலை வெட்டி விடுகிறார்கள்.

அதனால் பிரபுவிற்கும் அவரது தங்கை கணவரான சுமனுக்கும் மோதல் அதிகமாகிறது. அந்த இரு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க ஒரு இளைஞன் வருகிறான். அவனுக்கும் பிரபு மகளான ஹன்சிகாவுக்கும் இடையே ஏற்படும் காதல்தான் இப்படத்தின் கதை.

படத்தோட கதைய எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா…சரியா கண்டு பிடிக்கிறவங்களுக்கு இந்த ‘பூவே உங்களுக்காக’ அப்படின்னு சொல்லி பெரிய ‘பொக்கே’ பரிசா கொடுப்போம்…

விரைவில் தமிழில் வெளியாகிறது இந்த படம்…

Read Previous

‘ஃபேஸ்புக், ட்விட்டர்’ ரசிகர்கள் வேண்டாம் – சசிகுமார் அதிரடி

Read Next

தனுஷ் – காஜல் அகர்வால் புதிய ஜோடி…