தனுஷ் – காஜல் அகர்வால் புதிய ஜோடி…

dhanush-and-kajal-agarwalதனுஷ் தற்போது ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்கப் போகிறார். ஏற்கெனவே, ‘பொல்லாதவன்’ படத்தில் காஜல் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர், அந்த கதாபாத்திரத்தில் திவ்யா நடித்தார்.

பாலாஜி மோகன் தற்போது மலையாள நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மன், நஸ்ரியா நடிக்கும் ‘வாய் மூடிப் பேசவும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தனுஷ் – காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.

Read Previous

‘நாங்க எல்லாம் அப்பவே அப்படி’ – இது படத்தோட டைட்டில்..எப்புடி..?

Read Next

சிவகார்த்திகேயனின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’…