காவியத் தலைவன் – சிறப்புகள்…

kaviya thalaivan_00008

  • இயக்குநர் வசந்தபாலனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் முதல் முறையாக இணையும் படம் ‘காவியத் தலைவன்.’
  • சித்தார்த், பிருத்விராஜ், நாசர், வேதிகா, தம்பி ராமைய்யா, சிங்கம்புலி, மன்சூர் அலிகான், பொன்வண்னன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தில் களமிறங்கியுள்ளார்.
  •  நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு இளம் தலைமுறை இயக்குநருடன் ஏ.ஆர். ரகுமான் இணைந்திருக்கும் படம் இது.
  •  படம் முழுக்க நாடகம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் ஒப்பனையும் இப்படத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த ஒப்பனைக் கலைஞரான பட்டணம் ரசீத் அவர்கள் இப்படத்தில் ஒப்பனைக் கலைஞராக பணி புரிந்துள்ளார்.
  •  இப்படத்தின் கதை உருவாக்கத்திற்காக மதுரை புதுக்கோட்டை திண்டுக்கல் கரூர் என முக்கியமான நாடகச் சங்கங்களில் உள்ள மூத்தக் கலைஞர்களிடம் கலந்து ஆலோசித்து ஒரு வருடத்திற்கும் மேலாக இப்படத்திற்காக கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
  •  சித்தார்த்தும், பிருத்விராஜூம் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது.
  • ‘பரதேசி’ படத்தில் தன் நடிப்பின் மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த வேதிகாவிற்கு இந்தப்படம் பெரும் அடையாளம்.
  •  தமிழ், தெலுங்கு, இந்தி என பரபரப்பாக இயங்கும் நீரவ் ஷா ‘மதராசப்பட்டிணம்’ படத்திற்குப் பின் ஒளிப்பதிவு செய்யும் இரண்டாவது பீரியட் படம்.
  •  பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் இந்திப்படமான ‘சத்யா – 2’ படத்தின் கதாநாயகியான அனைக்கா சோட்டி இப்படத்தின் இன்னொரு கதாநாயகியாக தமிழில் முதல் முறையாக அறிமுகமாகிறார்.
  •  படம் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றியதென்பதால் படம் முழுக்க நிறைய நிஜ நாடகக் கலைஞர்கள் வேலை செய்துள்ளனர்.
  •  கவிஞர் வாலி அவர்கள் கடைசியாக எழுதிய பாடலான ‘கிருஷ்ண விஜயம்’ பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
  •  மறைந்த நடன இயக்குநர் ரகுராம் அவர்கள் இப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
  •  தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இந்தப்படம் வெளியாக உள்ளது
  • ‘பரதேசி’ படத்தில் சிறப்பாக உடைகள் கொடுத்த பெருமாள் செல்வமும், நிரஞ்சனி அகத்தியனும் இப்படத்திற்கான நாடக உடைகளை மிகச் சிறப்பாக உருவாக்கித் தந்துள்ளனர்.
  • ‘அங்காடித் தெரு’ வெற்றிக்குப்பின் எழுத்தாளர் ஜெயமோகன், இயக்குநர் வசந்தபாலனின் ‘காவியத்தலைவவன்’ படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
  •  இயக்குநர் வசந்தபாலன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், பா.விஜய், தம்பி ராமைய்யா, பட்டணம் ரஷீத், எடிட்டர் பிரவீன், காஸ்ட்யூமர் செல்வம் என தேசிய விருது பெற்ற ஏழு  கலைஞர்கள் இப்படத்தில் பங்காற்றியுள்ளனர்.

Read Previous

மார்ச் 16-ல் ‘மான் கராத்தே’ இசை வெளியீடு

Read Next

நல்ல படம் பண்றதுதான் ஆசை – இயக்குனர் வசந்தபாலன்

Most Popular