மார்ச் 16-ல் ‘மான் கராத்தே’ இசை வெளியீடு

maan karate audio launch news

சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பலர் நடித்துள்ள ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீடு மார்ச் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னர் திட்டமிட்டபடி இப்படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறுவதாக இருந்தது. இன்றைய நாளிதழ்களிலும் நாளை இசை வெளியீடு என்று விளம்பரங்களும் வெளியாகியுள்ளன.

படத்தின் இசையை வாங்கியுள்ள சோனி மியூசிக் நிறுவனம், சிடி, ஐ-டியூன்ஸ், வானொலி ஆகிய அனைத்திலும் ஒரே நாளில் இசையை வெளியிட திட்டமிட்டதால் கடைசி நேரத்தில் இந்த மாறுதல் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் இறுதிக் கட்டத்தில் படத்தின் பாடல்களை தரமேற்றும் வேலைகள் நடந்து வருவதாலும் இந்த தாமதம் எற்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

Read Previous

‘பப்பாளி’ விரைவில் வருகிறது…

Read Next

காவியத் தலைவன் – சிறப்புகள்…

Most Popular