‘பப்பாளி’ விரைவில் வருகிறது…

pappali-news

S.அம்பேத் குமார் , A .ரஞ்ஜீவ் மேனன் இருவரும் இணைந்து அரசூர் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம்  ‘’பப்பாளி’’.

இந்நிறுவனம் இதற்கு முன் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த ‘மனம் கொத்திப் பறவை’ வெற்றிப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் செந்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் புகழ் பெற்ற ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் நாயகன் .

கதாநாயகியாக இஷாரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார். மற்றும் இளவரசு , ஆடுகளம் நரேன், சிங்கம் புலி , ஜெகன் , கிருஷ்ணமூர்த்தி , கௌரவ வேடத்தில் நிரோஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

“இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படம் கமர்ஷியலான படம் மட்டுமல்ல நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய படம் என்று பாராட்டினார்கள். வரிவிலக்கு கமிட்டியைச் சேர்ந்த பி.வாசு, எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.என்.ராஜம்  போன்றவர்களும் நல்ல படம் என்ற முத்திரையை பதித்தார்கள்,” என்கிறார் இயக்குனர் ஏ.கோவிந்தமூர்த்தி.

ஏற்கனேவே இவர் இயக்கிய “கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன்” ஆகிய படங்களின் காமெடி காட்சிகளை ஒளிபரப்பாத சேனல்களே இல்லை என்றே கூறலாம்.

விரைவில் வெளிவருகிறது ‘பப்பாளி’.

Read Previous

இன்று 50வது நாளில் ‘வீரம், ஜில்லா’

Read Next

மார்ச் 16-ல் ‘மான் கராத்தே’ இசை வெளியீடு