இன்று 50வது நாளில் ‘வீரம், ஜில்லா’

veera-jilla-50th-day-news

அஜித் நடித்த ‘வீரம்’, விஜய் நடித்த ‘ஜில்லா’ இரண்டு படங்களும் இன்று 50வது நாளைத் தொட்டுள்ளன.

நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு அஜித், விஜய் நடித்த படங்கள் இந்த வருடம் ஜனவரி 10ம் தேதியன்று வெளியாகின.

இரண்டு படங்களுக்குமே மிகப் பெரிய ஓபனிங் இருந்தது. அதன் பின் நாம் விசாரித்த வரையில் இரண்டு படங்களின் வசூலில் ‘வீரம்’ அதிகமாகவும், ‘ஜில்லா’ அதற்கு சற்றே குறைவாகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இருப்பினும் லாப, நட்டக் கணக்கின் அடிப்பபடையில் இரண்டு படங்களுமே படத்தை வாங்கிய சிலருக்கு கொஞ்சம் நட்டத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்கிறார்கள்.

பணத்தைத் திருப்பிக் கொடுத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. வசூல் நிலவரம் எப்படியிருந்தாலும் அஜித், விஜய் ரசிகர்களுக்கு அவரவர் ஹீரோக்களின் படங்கள் திருப்திகரமாகவே அமைந்தது.

இருவரது அடுத்த படமும் மிகப் பெரிய இயக்குனர்களோடு இணைந்து தயாராவதால், இப்போதே அந்த படங்களுக்குமான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

Read Previous

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

Read Next

‘பப்பாளி’ விரைவில் வருகிறது…

Most Popular