ஒரு பக்கம் தேர்தல், மறுபக்கம் பிரம்மாண்டமான, எதிர்பார்ப்பைக் கூட்டும் படங்கள் என ஏப்ரல் மாதம் களை கட்டப் போகிறது.
இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 24ம் தேதி நடைபெற உள்ளது, அனைவருக்கும் தெரிந்ததே.
தேர்தலுக்கு முன்பும் , பின்பும் பல புதிய படங்கள் வெளிவர உள்ளன.
ரஜினிகாந்த் நடிப்பில் ‘கோச்சடையான்’, வடிவேலு நடிப்பில் ‘ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன், விஷால் நடிப்பில் ‘நான் சிகப்பு மனிதன்’, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மான் கராத்தே’ ஆகிய படங்களுடன், இன்றைய யூத்துகளின் ஃபேஸ்புக், ட்விட்டர் – நக்கல், நையாண்டி, கமெண்ட்டுகளை அன்றே திரைப்படங்களில் சொல்லி இன்றும் ரசிக்கப்பட்டு வரும் கவுண்டமணியின் ‘49 ஓ’ படமும் வெளிவர உள்ளது.
கவுண்டமணி ஸ்டைலில் சொல்வதென்றால் ‘அட்ரா சக்க…அட்ரா சக்க…அட்ரா சக்க….அட்ரா சக்க….’. ’அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா….”.
‘49-ஓ’ (49-O) என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதி. இந்த விதியின் நோக்கம் வாக்குச்சீட்டுக்களின் தவறான பயன்பாட்டையும் ஏமாற்றுதல்களையும் தடுப்பதாகும்.”
தேர்தல் நேரத்தில் இந்த ‘49 ஓ’ வெளிவருவது மிகவும் பொருத்தமான ஒன்று…