சிம்பு, ஹன்சிகா, சந்தானம் ஜோடியாக நடிக்க தமன் இசையமைப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள ‘வாலு’ படத்தின் பாடல்கள் இணையங்களில் இசை வெளியீட்டிற்கு முன்னரே திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.
இந்த வால்தனமான வேலை செய்தது யார் என்று தெரியவில்லை.
ஏற்கெனவே, நீண்ட கால தயாரிப்பில் இருக்கும் இந்த படம், சிம்பு – தயாரிப்பாளர் பிரச்சனை, சிம்பு – ஹன்சிகா காதல் பிரச்சனை என பல தடைகளைக் கடந்து நகர்ந்து வருகிறது.
இதனிடையே படத்தின் ஆடியோவை அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே, சில இணையதளங்களில் இந்த பாடல்கள் வெளியாகியிருப்பது திரையுலகிலும், சிம்பு ரசிகர்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
இதற்கு முன் கார்த்தி, ஹன்சிகா நடித்த ‘பிரியாணி’ படத்தின் பாடல்கள் கூட இப்படித்தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
அது என்ன ஹன்சிகா நடிக்கிற படமா பார்த்து இந்த திருட்டு வேலையை செய்யறாங்க….
இருந்தாலும் பாடல்கள் பிரமாதம் என அந்த பாடலையும் கேட்டு சிம்புவின் ரசிகர்கள் ட்வீட்டி வருகிறார்கள்.