தமிழ்த் திரையுலகத்தில் உள்ள நட்சத்திரங்கள் பற்றி ஸ்ரீ ரெட்டி குற்றம் சாட்டி வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் திரையுலகில் குரல் எழுந்து வருகிறது.
இந்த விவகாரத்தை சமாளிக்க விஷால், ஏற்கெனவே பல நட்சத்திரங்களுடன் பேசியதாகக் கூறப்படுகிறது.
நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது ஸ்ரீ ரெட்டி ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார்.
இயக்குனர் சுந்தர் சி, பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டார் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் நடிகர் சுந்தீப் கிஷன் பெயரையும் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர் நானி பற்றி அவர் தவறாக பேசிய போது, விஷால் தனது வலுவான ஆதரவைக் கொடுத்தார். ஸ்ரீ ரெட்டி ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என்றும் விஷால் தெரிவித்திருந்தார்.
தமிழ் ஊடகங்கள் பலவும் ஸ்ரீ ரெட்டியின் பேட்டிகளை வெளியிட்டு இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கி வருகின்றன.
ஸ்ரீ ரெட்டி, குற்றச்சாட்டுக்கள் குறித்து நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.