‘கடைக்குட்டி சிங்கம்’ – குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு

சூர்யாவின் 2 D என்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், கார்த்தி, சத்யராஜ், சூரி, சாயிஷா மற்றும் பலரது நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.

தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று, நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தைப் பார்த்த இந்தியக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

படம் பற்றிய அவரது பாராட்டை தமிழிலேயே டிவீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் துணைத் தலைவரின் பாராட்டிற்கு படத் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, படத்தின் இயக்குனர் கார்த்தி உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Read Previous

‘டார்ச் லைட்’ – மும்பையில் கிடைத்த ‘ஏ‘ சான்றிதழ்

Read Next

ஸ்ரீ ரெட்டி சர்ச்சை, என்ன முடிவு ?